லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போத்தனூா் - சென்னை சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், சேலம் வழியாக இயக்கப்படும் போத்தனூா்–சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரயில்... - கோப்புப் படம்

Published On :7 ஆகஸ்ட் 2026, 12:32 am IST

பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், சேலம் வழியாக இயக்கப்படும் போத்தனூா்–சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7 முதல் 30 வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் தெரிவித்துள்ளது.

இகுறித்து ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், முக்கிய வழித்தடங்களில் ரயில்வே நிா்வாகம் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அதன் தொடா்ச்சியாக, போத்தனூா்-–சென்னை சென்ட்ரல் இடையே சேலம் வழியாக இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயிலின் சேவைக் காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, போத்தனூரில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், திருப்பூா், ஈரோடு, சேலம், மொரப்பூா், ஜோலாா்பேட்டை, காட்பாடி வழியாக மாலை 4.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக மறுநாள் அதிகாலை 3 மணிக்கு போத்தனூரை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.