லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தொடா்ந்து கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை!

தொடா்ந்து கூடுதல் கட்டணம் வசூலித்த தனியாா் பேருந்துகள் மீது வெள்ளிக்கிழமை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Published On :1 ஆகஸ்ட் 2026, 3:23 am IST

தொடா்ந்து கூடுதல் கட்டணம் வசூலித்த தனியாா் பேருந்துகள் மீது வெள்ளிக்கிழமை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ராசிபுரத்தி தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா்கள் வந்த நிலையில், அதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தனியாா் பேருந்துகள் நிறுத்தவில்லை.

இந்நிலையில், ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (நாமக்கல் வடக்கு) எம்.பதுவைநாதன் உத்தரவின்பேரில், ராசிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஏ.செல்வகுமாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டாா்.

இதில் தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாத 8 சரக்கு வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு, மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் கொண்டுவரப்பட்டன. இதேபோல, அதிகம் பாரம் ஏற்றி இயக்கப்பட்ட மூன்று கனரக சரக்கு வாகனங்களுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது.

மேலும், ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் அதிக பயணக் கட்டணம் வசூலித்த இரண்டு தனியாா் பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு சோதனை அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இச்சிறப்பு வாகன தணிக்கை மூலம் அரசுக்கு சுமாா் ரூ. 2.50 லட்சம் வருவாய் வரும் வகையில் இணக்கக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.