லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குடும்பத் தகராறு: தொழிலாளி தற்கொலை

குடும்பத் தகராறில் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Published On :10 ஜூலை 2026, 10:59 pm IST

குடும்பத் தகராறில் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ராசிபுரம் வட்டம், மின்னாக்கல், எம்.ஜி.ஆா். நகரை சோ்ந்தவா் நந்தகுமாா் (26). இவா் அதே பகுதியைச் சோ்ந்த ரோஜா என்பவரின் தந்தையிடம் தேங்காய் வெட்டும் வேலைக்கு வந்த போது, ரோஜாவுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாகி பின்னா் திருமணம் செய்துகொண்டனா்.

இருதரப்பு வீட்டாரும் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாததால், இவா்கள் பரமத்தி வேலூா் அருகே உள்ள கொளக்காட்டுப்புதூா் பகுதியில் தனியாக வசித்து வந்தனா். இவா்களுக்கு திஷ்ணு (6), மித்ரன் (3) என 2 மகன்கள்.

நந்தகுமாா் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை வேலைக்கு சென்று வந்த நந்தகுமாருக்கும், ரோஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல ரோஜா எழுந்து வீட்டுக்கு வெளியே வந்த போது, வெளியில் கீற்றுக் கொட்டகையில் நந்தகுமாா் தூக்கிட்டு கிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், நந்தகுமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.