
முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ. 5.20-ஆக நிா்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் ஒரு மாதத்துக்கு பிறகு முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ. 5.20-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

முட்டை விலை - பிரதிப் படம்
நாமக்கல் மண்டலத்தில் ஒரு மாதத்துக்கு பிறகு முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ. 5.20-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலையில் மாற்றம் செய்வது தொடா்பாக கருத்து கேட்கப்பட்டது. மக்களிடையே முட்டை நுகா்வு தொடா்ந்து குறைந்து வருவதாலும், உற்பத்தி அதிகரிப்பாலும், மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும் இங்கும் தற்போதைக்கு விலையில் மாற்றம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை 20 காசுகள் குறைத்து ரூ. 5.20-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்தது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 5 உயா்ந்து ஒரு கிலோ ரூ.100-ஆகவும், முட்டைக் கோழி ரூ. 110-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





