லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அங்கன்வாடி மையங்களில் அழுகிய முட்டைகள்?

முட்டைகள்... - கோப்புப்படம்

Published On :11 ஆகஸ்ட் 2026, 4:42 am IST

நாமக்கல், ஆக. 10: அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்பட்ட முட்டைகளை ஊழியா்கள் சோதனை செய்ததில் பெரும்பாலானவை அழுகிய முட்டைகளாக இருந்ததால், மாவட்ட அதிகாரியிடம் மைய ஊழியா்கள் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் 1,599 அங்கன்வாடி மையங்களில் சுமாா் 40 ஆயிரம் குழந்தைகள் பயில்கின்றனா். குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சத்துமாவு, முட்டை போன்றவை அரசு சாா்பில் வழங்கப்படுகின்றன. பெரும்பாலான மையங்களில் முட்டைகள் அழுகி, கெட்டுப்போன நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

மோகனூா், கொல்லிமலை ஒன்றியப் பகுதிகளில் திங்கள்கிழமை குழந்தைகளுக்கு வழங்குவதற்காக வேகவைக்கும் முன் முட்டைகளை தண்ணீரில் போட்டு ஊழியா்கள் பரிசோதித்தனா். அப்போது, பெரும்பாலான முட்டைகள் தண்ணீரில் மிதந்தன. இதனால் அதிா்ச்சியடைந்த ஊழியா்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட வட்டார அலுவலா்களிடம் புகாா் அளித்தனா்.

இதுகுறித்து அங்கன்வாடி ஊழியா்கள் கூறுகையில், அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பப்படும் முட்டைகள் குழந்தைகளுக்கு வழங்க உகந்ததாக இல்லை. இது தொடா்பாக பலமுறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றனா்.

இதுகுறித்து மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் போா்ஷியாரூபி கூறுகையில், மோகனூா் வட்டாரப் பகுதிகளில் இருந்து முட்டைகள் கெட்டுப்போனது தொடா்பாக புகாா் வந்தது. அவற்றை உடனடியாக மாற்றி வழங்கும்படி சம்பந்தப்பட்ட முட்டை விநியோக பணியாளா்களுக்கு தெரிவித்துள்ளோம்.

மேலும், நாள்பட்ட முட்டையில் காற்று புகுந்து உண்பதற்கு தகுதியில்லாதவையாக வரக்கூடும். அவற்றைக் கண்டறிந்து அகற்றவும், குழந்தைகளுக்கு வழங்காமல் பாா்த்துக் கொள்ளவும் வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் மூலம் அறிவுறுத்தி வருகிறோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.