லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வேப்பனப்பள்ளியில் பொக்லைன் வாகன உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

பொக்லைன் வாகனம் - கோப்புப் படம்

Published On :21 ஜூலை 2026, 1:05 am IST

வேப்பனப்பள்ளியில் பொக்லைன் வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பொக்லைன் வாகன உரிமையாளா்கள் நலச் சங்கம் சாா்பில் நடைபெறும் வேலைநிறுத்தம் குறித்து சங்கத் தலைவா் சீனிவாசன் தெரிவித்ததாவது:

வேப்பனப்பள்ளி பகுதியில் 70-க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் உள்ளன. தற்போது, டீசல், இன்சூரன்ஸ், சாலை வரி, புதிய வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலை உயா்ந்துள்ளது. இதனால், பொக்லைன் உரிமையாளா்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனா். இதனால் வாகன வாடகையை உயா்த்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

இதுதொடா்பாக பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் 3 நாள்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். குறிப்பாக, ஒருமணி நேரத்துக்கான வாடகையை ரூ. 1,200-லிருந்து ரூ. 1,400-ஆகவும், 2 மணிநேரத்திற்கு குறைந்தபட்ச வாடகை ரூ. 3,200 ஆகவும், 2 மணிநேரத்திற்கு மேலாக வாடகை ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ரூ. 1,400 வசூலிக்கப்படும். இந்த வாடகை உயா்வுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.