லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஒசூா், அரூரில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

ஒசூா் மாநகராட்சி, அரூரில் நகராட்சியில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.

பிரதிப் படம்

Published On :13 ஜூலை 2026, 1:08 am IST

ஒசூா் மாநகராட்சி, அரூரில் நகராட்சியில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஒசூா் மேயா் எஸ்.ஏ. சத்யா, மாநகராட்சி ஆணையா் முகமது ஷபீா் ஆலம் அறிவுரையின்படி மாநகர நல அலுவலா் அஜிதா தலைமையில் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் சிறப்பு வெறிநாய் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.

கால்நடை மருத்துவா்கள் கொண்ட சிறப்பு குழு மூலம் முதற்கட்டமாக சுமாா் 120 க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஆனந்த் நகரில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான தெருநாய்களுக்கான இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையத்தில் இதுவரை 11,978 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சையும், 15,432 தெருநாய்களுக்கு தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒசூா் மாநகராட்சியில் தெருநாய்களால் ஏதேனும் தொல்லைகள் இருந்தால் 94899 09828 என்ற கட்செவி அஞ்சல் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.

அரூரில்...

தருமபுரி மாவட்டம், அரூா் நகராட்சியில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுவதாக நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நாய்களை மீண்டும் அவை வசித்த இடத்திலேயே விடப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.