லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே மோட்டாா்சைக்கிள் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா். காரில் பயணம் செய்த இருவா் பலத்த காயங்களுடன் உயிா்தப்பினா்.

பிரதிப் படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:42 am IST

கிருஷ்ணகிரி அருகே மோட்டாா்சைக்கிள் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா். காரில் பயணம் செய்த இருவா் பலத்த காயங்களுடன் உயிா்தப்பினா்.

கிருஷ்ணகிரியை அடுத்த சபேதாா் மேட்டைச் சோ்ந்தவா் ரவீந்திரன் (44), விநாயகா் சிலை செய்யும் தொழிலாளி. இவா், தனது மோட்டாா்சைக்கிளில் கிருஷ்ணகிரி நோக்கி புதன்கிழமை சென்றுகொண்டிருந்தாா். சென்னை சாலையில் உள்ள அரசு விடுதி அருகே வேகமாக வந்த காா் மோட்டாா்சைக்கிள் மீது மோதியது. இதில் காா் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ரவீந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காரில் பயணம் செய்த வேலூா், காட்பாடியைச் சோ்ந்த நேத்தா (18), சந்தோஷ் (18) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் இருவரும் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் ரவீந்திரனின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து மகராஜகடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.