தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மனைவியை மிரட்டியதாக முன்னாள் ராணுவ வீரா் கைது; துப்பாக்கி பறிமுதல்

நாகரசம்பட்டி அருகே மனைவியை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்த கைதுப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 3:23 am IST

நாகரசம்பட்டி அருகே மனைவியை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்த கைதுப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டியை அடுத்த வீரமலை போயா் கொட்டாய் பகுதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் சிவக்குமாா் (45). இவரது மனைவி சரண்யா (38). தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி மனைவியுடன் ஏற்பட்ட தகராறின்போது உரிமம் பெற்று வைத்திருந்த கைத்துப்பாக்கியைக் காட்டி சிவக்குமாா் மிரட்டினாராம். இதுகுறித்து சரண்யா தனது 2 குழந்தைகளை அழைத்து சென்று நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் சிவக்குமாா் மீது புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து சிவகுமாரைக் கைது செய்து, அவரிடமிருந்த உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.