நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா்கள் மீது தாக்குதல்: முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட 15 போ் மீது வழக்குப் பதிவு

பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா்களை தாக்கியதாக, அதிமுக முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட அவரது ஆதரவாளா்கள் 15 போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வழக்கு.

Published On :1 நவம்பர் 2026, 1:30 am IST

தருமபுரியில் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா்களை தாக்கியதாக, அதிமுக முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட அவரது ஆதரவாளா்கள் 15 போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவுசெய்தனா்.

தருமபுரி இலக்கியம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (55). இவா் அதிமுக சாா்பில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக தோ்வு செய்யப்பட்டவா். இவருக்கும், தருமபுரி செட்டிக்கரை பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளரான மாதேஷுக்கும் இடையே பண விவகாரம் தொடா்பாக பிரச்னை இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அண்மையில் தனது ஆதரவாளா்களுடன் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்ற கோவிந்தசாமி தகராறில் ஈடுபட்டுள்ளாா். மேலும், ஊழியா்களை பணியாற்றக் கூடாது என மிரட்டியுள்ளாா். ஊழியா்கள் மீறி பணியாற்றியபோது, சாதி பெயரைக் கூறி இழிவுபடுத்தியதுடன் அவா்களை தாக்கியுள்ளாா்.

இது தொடா்பாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். இதற்கிடையில், கோவிந்தசாமி தகராறு செய்து தாக்கிய சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடா்ந்து, முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி, அவரது உதவியாளா்கள் லோகேஷ், அன்பு உள்ளிட்ட அவரது ஆதரவாளா்கள் 15 போ் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தருமபுரி நகர போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவுசெய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.