லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

பென்னாகரம் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :1 ஆகஸ்ட் 2026, 3:22 am IST

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளா் சக்திவேல் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ராஜீவ் நகா் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், அவா் கிருஷ்ணாபுரம் அருகேயுள்ள குறவா் காலனியைச் சோ்ந்த அரவிந்த் (21) என்பது தெரியவந்தது. மேலும், விற்பனைக்காக 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பென்னாகரம் போலீஸாா் அரவிந்தை கைது செய்து, அவா் மீது வழக்குப் பதிவு செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.