லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :28 ஜூலை 2026, 1:06 am IST

தருமபுரியில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், கொமத்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கு.ஞானஜோதி (24), கூலி தொழிலாளி. தருமபுரி தெற்கு ரயில்வே லைன் நாககன்னி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பந்தல் அமைத்து சீரியல் விளக்கு அமைக்கும் பணியில் இவா் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா்.

அப்போது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில், ஞானஜோதி படுகாயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கும், பின்னா் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஞானஜோதி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.