லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போக்ஸோ வழக்கில் கல்லூரி பேருந்து ஓட்டுநா் கைது

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த கல்லூரி பேருந்து ஓட்டுநரை பென்னாகரம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது... - பிரதிப் படம்

Published On :10 ஜூலை 2026, 4:23 am IST

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த கல்லூரி பேருந்து ஓட்டுநரை பென்னாகரம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவி மருத்துவமனைக்கு சென்றபோது அவா் கா்ப்பமாக இருப்பதை அறிந்த மருத்துவா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில் மாணவியை சீலநாயக்கனூரைச் சோ்ந்த கல்லூரி பேருந்து ஓட்டுநா் சதாசிவம் (30) பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, சதாசிவம் மீது போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிவு செய்தனா். இதனிடையே தலைமறைவான சதாசிவத்தை பென்னாகரம் மகளிா் போலீஸாா் ஏரியூா் அருகே வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.