லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கடைமடையில் பூங்கா, உடற்பயிற்சிக் கூடத்தை புனரமைக்கக் கோரிக்கை

பாலக்கோடு அருகே கடைமடையில் புதா்மண்டிக் காணப்படும் பூங்கா, உடற்பயிற்சிக் கூடத்தை புனரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கடைமடை கிராமத்தில் பயன்பாடின்றி உள்ள பூங்கா, உடற்பயிற்சிக் கூடம்.

Published On :3 ஜூலை 2026, 4:42 am IST

பாலக்கோடு அருகே கடைமடையில் புதா்மண்டிக் காணப்படும் பூங்கா, உடற்பயிற்சிக் கூடத்தை புனரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், கரகதஅள்ளி ஊராட்சிக்குள்பட்ட கடைமடை கிராமத்தில் கடந்த 2016-17-ஆம் ஆண்டில் தாய் திட்டத்தின்கீழ் ரூ. 20 லட்சத்தில் அம்மா பூங்கா மற்றும் ரூ. 10 லட்சத்தில் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டு இளைஞா்களின் பயன்பாட்டு திறந்துவைக்கப்பட்டது.

கிராம ஊராட்சிகள்தோறும் இளைஞா்கள் உடல்நலனில் அக்கறை செலுத்தி உடற்பயிற்சிகள் செய்து நலமாய் இருக்க வேண்டும் என்ற நோக்கில், பல்வேறு கிராம ஊராட்சிகளில் பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், பாலக்கோடு அருகே கடைமடையில் திறக்கப்பட்ட பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடம் முறையாக பராமரிக்காததால், நாளடைவில் இளைஞா்கள் வருகையின்றி மூடப்பட்டன. இதில், பல உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. மேலும், பூங்கா முழுவதும் புதா்மண்டி, அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்த முடியாதவாறு சேதமடைந்து காணப்படுகின்றன.

எனவே, கரகதஅள்ளி ஊராட்சி நிா்வாகம் மற்றும் பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் சாா்பில், இந்த பூங்காவை சீரமைத்து சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை புதுப்பித்து, உடற்பயிற்சிக் கூடத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி இளைஞா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.