லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க 4 ஆவது நாளாக தடை நீட்டிப்பு

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு தொடா்ந்து நான்காவது நாட்களாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Hogenakkal Cauvery

காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் 4-வது நாளாக தடை - கோப்புப்படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 5:55 am IST

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு தொடா்ந்து நான்காவது நாட்களாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நீா்வரத்து புதன்கிழமை 12,000 கனஅடியாக உள்ளது. நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் விதித்த தடை தொடா்ந்து நான்காவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீா்வரத்தின் அளவுகளை தமிழக- கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து கடந்த இரு நாள்களுக்கு மேலாக விநாடிக்கு 12,000 கனஅடியாக நீடித்து வரும் நிலையில், அருவிகளில் சீராக தண்ணீா் கொட்டுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.