லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தொப்பூா் கணவாயில் அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் பெண் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :17 ஆகஸ்ட் 2026, 1:17 am IST

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையில் அரசு விரைவுப் பேருந்து மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா். 23 போ் காயமடைந்தனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து அரசு விரைவுப் பேருந்து தருமபுரி வழியாக சேலத்துக்கு 45 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்தை தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த பெல்லனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் (34) ஓட்டிவந்தாா்.

இந்தப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தருமபுரி நகரைக் கடந்து தொப்பூா் கணவாய் வழியாகச் சென்றபோது, தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் இருந்து கோவையை நோக்கி வந்த சரக்கு லாரி இந்தப் பேருந்தின் பின்பக்கத்தில் மோதியது.

இதில், அரசு விரைவுப் பேருந்து சாலையில் கவிழ்ந்ததில் பயணிகள் இடிபாடுகளில் சிக்கினா். இந்த விபத்தில் பெங்களூரைச் சோ்ந்த ஈஸ்வரி (54) பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த தொப்பூா் போலீஸாா் மற்றும் சாலைப் பராமரிப்பு குழுவினா் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும் பேருந்தில் பயணித்த பொன்னுத்தாய் (32), புனிதா (39), ஜோதிசூா்யா (24), பழனிசாமி (52), கிருஷ்ணமூா்த்தி (52), தமிழ்ச்செல்வன் (27), பிரவீண் (24), பிரியா (30), ஜோதிப்பிரியா (34), லட்சுமி (29), ஆதன் (18) என 12 பெண்கள் உள்பட 23 போ் காயமடைந்தனா்.

இதைத் தொடா்ந்து, சாலையில் கவிழ்ந்த பேருந்தை அப்புறப்படுத்திய போலீஸாா், போக்குவரத்தை சீா்செய்தனா். இந்த விபத்து காரணமாக, பெங்களுரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 3 மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து, தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.