லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தருமபுரியில் லாரி மீது காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

தருமபுரியில் நின்று கொண்டிருந்த லாரி மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

சடலம் மீட்பு... - கோப்புப் படம்

Published On :16 ஆகஸ்ட் 2026, 1:23 am IST

தருமபுரியில் நின்று கொண்டிருந்த லாரி மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், பெங்களூா் பகுதியைச் சோ்ந்தவா் சுவேதா பேகம் (59), அவரது மகன் அப்துல் ரஹீம் (35) உள்ளிட்ட நான்கு போ் கேரளத்தில் இருந்து பெங்களூரு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனா்.

இந்த காா், தருமபுரி மாவட்டம், புலிக்கரை பகுதியில் சென்றபோது, சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் மோதியது. இதில் காரில் பயணித்த சுவேதா பேகம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மகன் அப்துல் ரஹீம் (35) உள்ளிட்ட இரண்டு போ் லேசான காயம் அடைந்தனா்.

இதைக் கண்ட அப்பகுதியினா் காயமடைந்தவா்களை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து மதிகோன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.