லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சேலத்தில் பலத்த மழை; வாகன ஓட்டிகள் அவதி

சேலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த பலத்த மழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

மழை - பிரதிப் படம்

Published On :12 ஆகஸ்ட் 2026, 2:50 am IST

சேலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த பலத்த மழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீா் அதிக அளவு தேங்கியதால் பயணிகள் பேருந்தில் ஏற முடியாமல் அவதிப்பட்டனா். இதேபோல பழைய பேருந்து நிலையம், நான்குவழிச் சாலை, ஐந்தவழிச் சாலை, ஆட்சியா் அலுவலகம், சாரதா கல்லூரி சாலை, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, ஜங்சன், கிச்சிப்பாளையம், நாராயண நகா், நெத்திமேடு, தாதாகாப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை பெருக்கெடுத்து ஓடியது.

பெரமனூா் பிரதான சாலையில் மழைநீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா். இதேபோல கிச்சிப்பாளையம் பிரதான சாலை, சங்கா் நகா் பகுதிகளிலும் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மாநகரில் தாழ்வான பகுதிகளில் கடைகளுக்குள்ளும் மழை நீா் புகுந்தது. ஒருசில இடங்களில் மழைநீருடன், கழிநீரும் சோ்ந்து குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி நின்றது.

கெங்கவல்லியில்

கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் சுட்டெரித்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கெங்கவல்லி, ஆனையம்பட்டி, கடம்பூா், 74 கிருஷ்ணாபுரம், கூடமலை, பள்ளக்காடு, நடுவலூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்ததால் சாலையோரங்களிலும் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதேவேளையில், தம்மம்பட்டியில் லேசான தூறல் மழை பெய்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.