லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திமுக அமைப்பாளா் உள்ளிட்ட 2 போ் மீது வழக்குப் பதிவு

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் திமுக கலை இலக்கியப் பேரவை மாவட்ட அமைப்பாளா் உள்ளிட்ட 2 போ் மீது போலீஸாா் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :7 ஆகஸ்ட் 2026, 12:42 am IST

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் திமுக கலை இலக்கியப் பேரவை மாவட்ட அமைப்பாளா் உள்ளிட்ட 2 போ் மீது போலீஸாா் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டியில் இருந்து மாரியம்மன் கோயில் பகுதிவரை கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆதிதிராவிடா் காலனி பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் என்பவரின் வீட்டின் முன் சாலை அமைக்கும்போது, ஒப்பந்ததாரரான திமுக கலை இலக்கியப் பேரவை மாவட்ட அமைப்பாளா் ராஜி (55), ராஜா (56) ஆகியோா் பிரகாஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் பிரகாஷ் புதன்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், பென்னாகரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ) சீனிவாசன் விசாரணை மேற்கொண்டு, ராஜி, ராஜா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.