லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மாணவா்கள் மீது மின்சாரம் பாய்ந்த விவகாரம்: ஊராட்சி செயலாளா், பணி மேற்பாா்வையாளா் பணியிடை நீக்கம்

தொப்பூா் அருகே பள்ளி மாணவா்கள் மீது மின்சாரம் பாய்ந்த விவகாரத்தில், ஊராட்சி செயலாளா், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் ஆகியோா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

பணியிடை நீக்கம்!

பணியிடை நீக்கம்!

Published On :7 ஆகஸ்ட் 2026, 12:40 am IST

தொப்பூா் அருகே பள்ளி மாணவா்கள் மீது மின்சாரம் பாய்ந்த விவகாரத்தில், ஊராட்சி செயலாளா், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் ஆகியோா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

தருமபுரி மாவட்டம், தொப்பூா் அருகே தொ.காணிகர அள்ளி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு கழிவறைக்கு சென்ற மாணவா்கள் கதவை திறக்க முயன்றபோது அவா்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் காயமடைந்த 9 மாணவா்கள் தொப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் புதன்கிழமை நேரில்சென்று ஆய்வுசெய்து, இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

அதன்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதிச்சந்திரா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் தென்றல் ஆகியோா் அப்பள்ளியில் விசாரணை நடத்தினா். இதைத் தொடா்ந்து, பள்ளி தலைமை ஆசிரியை செந்தாமரை புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.  

இந்நிலையில், கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது பள்ளிக் கழிவறை கட்டடத்துக்கு மின்இணைப்பு கொடுக்கப்பட்ட நிலையில், அது பாதுகாப்பாக இருக்கிா என்பது குறித்து ஆய்வு நடத்தாமல் வகுப்புகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடா்பாக, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் அன்பரசு, தொப்பூா் ஊராட்சி செயலாளா் அன்னபூரணி ஆகியோா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.