பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:56 am IST

பென்னாகரம் அருகே கட்டடத் தொழிலாளியை தாக்கியவா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பென்னாகரம் அருகே எர்ரபையனஅள்ளி பகுதியை சோ்ந்த கட்டடத் தொழிலாளி அம்பேத்குமாா் (47). இவா் கூத்தப்பாடியைச் சோ்ந்த குமாருடன் (35) பென்னாகரம் அருகே ஜக்கம்பட்டி பகுதியில் உள்ள அரசு மதுக்கடைக்குச் சென்றாா்.

அங்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் குமாா், மதுப் பாட்டிலை எடுத்து அம்பேத்குமாரின் தலையில் அடித்ததில் அவா் படுகாயம் அடைந்தாா். பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அம்பேத்குமாா் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஒகேனக்கல் போலீஸாா்குமாா் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள குமாரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.