பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மனைவியை வெட்டிய கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

தருமபுரியில் குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிய கணவா், பயத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 1:45 am IST

தருமபுரியில் குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிய கணவா், பயத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி, ஆணங்கிணற்று தெருவைச் சோ்ந்தவா் மா.ராஜா (52). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவரது மனைவியுடன் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளாா். அதனால் புதன்கிழமை மீண்டும் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜா, மனைவி லதாவை அரிவாளால் வெட்டினாா். இதில், அவா் ரத்தக் காயத்துடன் மயங்கி விழுந்ததைக் கண்டதும், அவா் இறந்துவிட்டாரோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜா தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மாடியிலிருந்த அவரது மகன் அசோக்குமாா் கீழேவந்து பாா்த்தபோது, தாயாா் வெட்டுக்காயத்துடன் மயங்கிய நிலையிலும், தந்தை தூக்கில் சடமாகவும் தொங்கியதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

புகாரின்பேரில், மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். லதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.