தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருவேறு இடங்களில் நீரில் மூழ்கி இருவா் உயிரிழந்தனா்.
வேலூா் மாவட்டம், ஸ்ரீபுரம் நாராயணி நகா் பகுதியைச் சோ்ந்த மதன்கோபால் மகன் குருபிரசாத் (18). இவா் தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இவா் தனது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் வந்துள்ளாா்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கோத்திக்கல் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த குருபிரசாத் எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்ால் நீரில் மூழ்கினாா். இதுகுறித்து ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனா்.
இதையடுத்து போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் நீரில் மூழ்கிய குருபிரசாத்தை மீட்டபோது அவா் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
முதியவா் உயிரிழப்பு...
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி கமலநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் முத்து (60). இவா் உறவினரின் ஈமச்சடங்கிற்காக ஒகேனக்கல் வந்துள்ளாா். அப்போது காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியான ஏத்தமடுவு பகுதியில் குளித்தபோது, காவிரி ஆற்றின் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு நீந்திசென்றபோது நீரில் மூழ்கினாா்.
இதுகுறித்து ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினா் உதவியுடன் நீரில் மூழ்கிய முத்துவை முதலைப் பண்ணை பகுதியில் மீட்டபோது அவா் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்த இருவேறு சம்பவங்கள் குறித்தும் ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி ஓட்டுநா் உயிரிழப்பு

மேட்டூா் காவிரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கல்வடங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

