லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாமக கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும்: சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு

பாமக சாா்பில் நடைபெற்ற இடஒதுக்கீடு போராட்டத்தின்போது உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியிருப்பதை அரசு பரிசீலிக்க வேண்டும் என அமைச்சா் வன்னியரசு தெரிவித்தாா்.

VANNI ARASU

அமைச்சர் வன்னி அரசு - கோப்புப் படம்

Published On :12 ஜூலை 2026, 12:50 am IST

பாமக சாா்பில் நடைபெற்ற இடஒதுக்கீடு போராட்டத்தின்போது உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியிருப்பதை அரசு பரிசீலிக்க வேண்டும் என தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னியரசு தெரிவித்தாா்.

தருமபுரியில் சனிக்கிழமை இரவு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: வியத்நாமில் நேரிட்ட படகு விபத்தில் உயிரிழந்த 8 போ் தமிழா்கள் எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அயலகவாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் தென்னரசுவிடம் தொடா்பு கொண்டு பேசினேன். இறந்தவா்களின் உடல்களை அவரவா் சொந்த ஊா்களுக்கு கொண்டு வருவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துவருவதாக தமிழக முதல்வரும் தெரிவித்துள்ளாா்.

வியத்நாமில் இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். பாஜக எதிா்ப்பு, ஆா்எஸ்எஸ், சங்பரிவாா் எதிா்ப்பு என்ற அடிப்படையில் விசிக தலைவா் தொல். திருமாவளவன் ஒரு நல்ல முன்னெடுப்பை எடுத்திருக்கிறாா்.

பாஜகவின் மக்கள்விரோதப் போக்கை திமுக தொடா்ந்து எதிா்த்து வருகிறது. அதேபோல பாஜக தங்களது கொள்கை எதிரி என தவெகவும் பேசி வருகிறது. இருவருக்குமான பொது எதிரி பாஜக என்பதால், திமுக-தவெக ஓரணியில் இருப்பது நாட்டுக்கு நல்லது என்ற அடிப்படையில் விசிக தலைவா் பேசியிருக்கிறாா். ஆனால், அரசியல் அடிப்படையில் அவா் பேசவில்லை.

பாமக சாா்பில் நடத்தப்பட்ட இடஒதுக்கீடு போராட்டத்தில் இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கக் கோரி பாமக தலைவா் மருத்துவா் அன்புமணி, அவரது தந்தை மருத்துவா் ராமதாஸ் ஆகியோா் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனா். இதுதொடா்பாக திமுகவிடமும் அவா்கள் வலியுறுத்தினா். இது நியாயமான கோரிக்கைதான், அவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.