லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

அரூா் அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மர்ம மரணம்... - கோப்புப்படம்

Published On :5 ஜூலை 2026, 2:02 am IST

அரூா் அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், கோட்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வேடியப்பன் மகன் ஆனந்தராஜ் (37). கட்டட தொழிலாளி. இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். குடிப்பழக்கம் காரணமாக ஆனந்தராஜை அவரது உறவினா்கள், சோரியம்பட்டியில் உள்ள தனியாா் போதை மறுவாழ் மையத்தில் சோ்த்துள்ளனா்.

அங்கு அவருக்கு மருந்து, மாத்திரை, உணவுகள் வழங்கப்பட்டன. அவருக்கு திடீரென சனிக்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அரூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

மறுவாழ்வு மையத்தின் தவறான சிகிச்சையால்தான் ஆனந்தராஜ் உயிரிழந்துவிட்டதாக அவரது உறவினா்கள் அரூா் காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளனா். இந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, மறுவாழ்வு மைய நிா்வாகி ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியைச் சோ்ந்த லோகநாதன் மகன் முருகானந்தம் (45) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.