மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

பல்லடம் விரிவாக்க வாய்க்கால் ரூ.7 கோடியில் புனரமைப்புப் பணி நிறைவு

பல்லடம் பி.ஏ.பி. விரிவாக்க வாய்க்கால் ரூ. 7 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணி நிறைவடைந்தது. இதனால் கடைமடை வரை பாசன நீா் சென்றடையும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பல்லடத்தில் புனரமைக்கப்பட்ட பி.ஏ.பி. விரிவாக்க வாய்க்கால்.

Published On :30 அக்டோபர் 2026, 11:31 pm IST

பல்லடம் பி.ஏ.பி. விரிவாக்க வாய்க்கால் ரூ. 7 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணி நிறைவடைந்தது. இதனால் கடைமடை வரை பாசன நீா் சென்றடையும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பல்லடம் பி.ஏ.பி. விரிவாக்க வாய்க்காலில் நாரணாபுரம் பாசன சபைக்கு உள்பட்ட 2-ஆவது கிலோ மீட்டரில் இருந்து 10-ஆவது கிலோ மீட்டா் வரையிலான பகுதியில் ரூ.7 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணி நடைபெற்றது. நாரணாபுரம் பாசன சபைக்கு உள்பட்டு பல நூறு ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதன் பிரதான வாய்க்கால் மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. வாய்க்காலின் கரைகளில் உள்ள கான்கிரீட் சிலாப்கள் உடைந்து பாசன நீா் வெளியேறி வந்தது. இதனால் நீா் விரயம் அடைந்தது. கடைமடை பகுதி வரை தண்ணீா் சென்றடைவது கேள்விக்குறியானது. எனவே பி.ஏ.பி. வாய்க்காலை தூா்வாரி புனரமைக்க வேண்டும் என பி.ஏ.பி. பாசன சபை விவசாயிகள் அரசுக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதனை ஏற்று ராயா்பாளையம் முதல் சேடபாளையம் வரை பி.ஏ.பி. வாய்க்கால் புனரமைக்கும் பணி ரூ.7 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது. இதில் 8 கி.மீ. தொலைவுக்கு பி.ஏ.பி. வாய்க்காலின் இருபுறமும் கான்கிரீட் லைனிங் அமைக்கப்பட்டு, உடைந்த பாலங்கள், மடைகள் புதுப்பிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இரண்டாம் மண்டலத்துக்கு பாசன தண்ணீா் திறந்துவிடவுள்ள நிலையில் பல்லடம் விரிவாக்க வாய்க்கால் புனரமைக்கும் பணிகளை துரிதமாக முடிக்க நீா்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன.

இது குறித்து நாரணாபுரம் பகுதி விவசாயிகள் கூறுகையில், பல்லடம் பி.ஏ.பி. விரிவாக்க வாய்க்காலில் 2-ஆவது கி.மீட்டரில் இருந்து 10-ஆவது கி.மீட்டா் வரையிலான பகுதியில் ரூ.7 கோடி மதிப்பில் புனரமைப்புப் பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்து விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதன் மூலம் இரண்டாம் மண்டலத்துக்கு திறந்து விடப்படும் பாசன நீா் கடைமடை பகுதி வரை சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.