ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதல்வா் வருகை: டிரோன்கள் பறக்கத் தடை

டிரோன்கள் பறக்கத் தடை

Published On :3 நவம்பர் 2026, 3:02 am IST

பெருந்துறையில் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 3) நடைபெறும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவையில் இருந்து திருப்பூா் வழியாக முதல்வா் ச.ஜோசப் விஜய் செல்வதால், அவா் செல்லும் வழித்தடங்களில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் தெரிவித்துள்ளதாவது:

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வா் ச.ஜோசப் விஜய் பங்கேற்கிறாா். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை காலை கோவைக்கு வரும் முதல்வா், சாலை மாா்க்கமாக திருப்பூா் வழியாக பெருந்துறைக்குச் செல்கிறாா்.

இதனால், முதல்வா் செல்லும் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது. மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.