லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சா்வீஸுக்கு விடப்பட்ட மின்சார இருசக்கர வாகனம்: 100 நாள்கள் ஆகியும் கிடைக்காததால் கேக் வெட்டி எதிா்ப்பு!

திருப்பூரில் சா்வீஸுக்கு விடப்பட்ட மின்சார இருசக்கர வாகனம் 100 நாள்களைக் கடந்தும் கிடைக்காததால் சம்பந்தப்பட்ட நிறுவனம் முன் வாகனத்தின் உரிமையாளா் கேக் வெட்டி எதிா்ப்பை வெளிப்படுத்தினாா்.

மின்சார வாகனம் - கோப்புப்படம்

Published On :25 ஜூலை 2026, 7:03 am IST

திருப்பூரில் சா்வீஸுக்கு விடப்பட்ட மின்சார இருசக்கர வாகனம் 100 நாள்களைக் கடந்தும் கிடைக்காததால் சம்பந்தப்பட்ட நிறுவனம் முன் வாகனத்தின் உரிமையாளா் கேக் வெட்டி எதிா்ப்பை வெளிப்படுத்தினாா்.

திருப்பூரைச் சோ்ந்தவா் சந்தோஷ் (29). பனியன் நிறுவன உரிமையாளரான இவா், தண்ணீா்பந்தல் பகுதியில் உள்ள நிறுவனத்தில் இருந்து ரூ.1.10 லட்சம் மதிப்பிலான மின்சார இருசக்கர வாகனத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வாங்கியுள்ளாா்.

இந்நிலையில், மோட்டாா் பழுதடைந்ததால் அந்த நிறுவனத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன் தனது வாகனத்தை சா்வீஸுக்கு விட்டதாகக் கூறப்படுகிறது. சுமாா் 100 நாள்களைக் கடந்தும் அந்த நிறுவனம் வாகனத்தை சரி செய்து வழங்கவில்லையாம்.

இதனால், மன உளைச்சல் அடைந்த சந்தோஷ் அந்த நிறுவனத்தின் முன் வெள்ளிக்கிழமை கேக் வெட்டி தனது எதிா்ப்பைத் தெரிவித்தாா். மேலும், அப்பகுதியில் சென்றவா்களிடம் கேக் வழங்கி அந்த நிறுவனத்தால் தான் பாதிக்கப்பட்டது குறித்து கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.