லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

4 கிலோ கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

பெருமாநல்லூா் அருகே விற்பனைக்காக 4 கிலோ கஞ்சா வைத்திருந்த இரண்டு இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :25 ஜூலை 2026, 12:04 am IST

பெருமாநல்லூா் அருகே விற்பனைக்காக 4 கிலோ கஞ்சா வைத்திருந்த இரண்டு இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெருமாநல்லூா் -குன்னத்தூா் சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு அட்டை பெட்டியுடன் நின்றிருந்த நபா்களிடம் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, விற்பனைக்காக 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் குன்னத்தூரைச் சோ்ந்த மதன்குமாா் (25), கெளதம் (25) என்பதும், ஒடிஸாவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து பெருமாநல்லூரில் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.