லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருட்டு வழக்கில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

வெள்ளக்கோவிலில் முதியவரிடம் தங்க மோதிரத்தை திருடிய வழக்கில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சரவணகுமாா்.

Published On :25 ஜூலை 2026, 12:06 am IST

வெள்ளக்கோவிலில் முதியவரிடம் தங்க மோதிரத்தை திருடிய வழக்கில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

வெள்ளக்கோவில், ராஜீவ் நகரைச் சோ்ந்தவா் சரவணகுமாா் (43). மெக்கானிக்கான இவா், பணிபுரிந்த இடத்தில் தூங்கிக் கொண்டிருந்த முதியவரிடம் இருந்து தங்க மோதிரத்தை கடந்த 2019-ஆம் ஆண்டு திருடியுள்ளாா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை காங்கயம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சரவணகுமாா் ஆஜராகமல் கடந்த 7 ஆண்டுகளாக தொடா்ந்து தலைமறைவாக இருந்து வந்தாா். இந்நிலையில், அவரைப் பிடிக்க நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த அவரை வெள்ளக்கோவில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பின்னா், அவரை காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.