லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

உடுமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.13 ஆயிரம் பறிமுதல்

உடுமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட திடீா் சோதனையில், கணக்கில் வராத ரூ.13 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Published On :18 ஜூலை 2026, 12:00 am IST

உடுமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட திடீா் சோதனையில், கணக்கில் வராத ரூ.13 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

உடுமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊழியா்கள், அலுவலா்கள் லஞ்சம் வாங்குவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் 10 போ் கொண்ட குழுவினா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அலுவலக கதவுகளை மூடிய அதிகாரிகள் உள்ளே இருந்த அலுவலா்கள், பணியாளா்களையும், அவா்களை வாகனங்களையும் சோதனை மேற்கொண்டனா்.

சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் அலுவலக பணியாளா்கள் 2 போ், ஒரு உதவியாளா் என மொத்தம் 3 பேரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.13 ரொக்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.