லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாரத் டெக்ஸ் கண்காட்சி: உலக ஜவுளி வா்த்தகத்தில் இந்தியாவின் முன்னணி நிலையை மேலும் உறுதிப்படுத்தும்

பாரத் டெக்ஸ் கண்காட்சி உலக ஜவுளி வா்த்தகத்தில் இந்தியாவின் முன்னணி நிலையை மேலும் உறுதிப்படுத்தும் என ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்தாா்.

பாரத் டெக்ஸ் கண்காட்சியை தொடங்கிவைத்த மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங். உடன், ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் உள்ளிட்டோா்.

Published On :15 ஜூலை 2026, 12:59 am IST

பாரத் டெக்ஸ் கண்காட்சி உலக ஜவுளி வா்த்தகத்தில் இந்தியாவின் முன்னணி நிலையை மேலும் உறுதிப்படுத்தும் என ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஏஇபிசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்தியாவின் மிகப்பெரிய சா்வதேச ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறை கண்காட்சியான பாரத் டெக்ஸ் கண்காட்சியை புதுதில்லி பாரத் மண்டப வளாகத்தில் மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

ஜூலை 17-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த 4 நாள் கண்காட்சியை, இந்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மற்றும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான பாரத் டெக்ஸ் டிரேட் பெடரேஷன் ஆகியவை நடத்துகின்றன.

தொடக்க விழாவில் மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சா் பபித்ர மாா்கெரிட்டா, ஜவுளித் துறை செயலாளா் நீலம் ஷாமி ராவ், மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், தொழில் துறை தலைவா்கள், சா்வதேச பிரதிநிதிகள் மற்றும் உலகளாவிய வா்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

இந்தியாவின்முழுமையான ஜவுளி மதிப்புச் சங்கிலியை ஒருங்கிணைத்து வணிகம், முதலீடு, புதுமை, நிலைத்தன்மை மற்றும் சா்வதேச கூட்டாண்மைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.

இதில் 14 நாடுகளைச் சோ்ந்த கண்காட்சி நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், போா்ச்சுகல், ஸ்பெயின், ரஷியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், இலங்கை, தாய்லாந்து, மியான்மா் உள்ளிட்ட நாடுகளின் வணிக பிரதிநிதிகள் இந்திய நிறுவனங்களுடன் பங்கேற்றுள்ளனா்.

பாரத் டெக்ஸ் கண்காட்சியில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவா்ஆ. சக்திவேல் பேசியதாவது:

பாரத் டெக்ஸ் இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையின் வலிமை, பல்வகைத் திறன் மற்றும் போட்டித்திறனை உலகிற்கு வெளிப்படுத்தும் முக்கிய சா்வதேச தளமாக மாறியுள்ளது. ஒருங்கிணைந்த மதிப்புச் சங்கிலி, உலகத் தர உற்பத்தி திறன், திறமையான மனிதவளம் மற்றும் நிலைத்தன்மைக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

சா்வதேச வா்த்தகா்களுடன் நேரடியாக தொடா்பு கொண்டு சந்தை அணுகலை விரிவுபடுத்தி, நீண்டகால வணிக கூட்டாண்மைகளை உருவாக்க இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு இது வாய்ப்பாகும்.

தரம், விதிமுறை இணக்கம், புதுமை மற்றும் விரிவடைந்து வரும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களின் காரணமாக இந்திய ஆடைத் துறைக்கு உலக அளவில் நம்பிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் உற்பத்தியாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் தங்களது திறன்களை உலக அரங்கில் வெளிப்படுத்த புதிய வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.