லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குண்டடம் அருகே சேதமடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை

குண்டடம் அருகே வேங்கிபாளையம் பகுதியில் சேதமடைந்த தாா் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை

வேங்கிபாளையம் பகுதியில் சேதமடைந்துள்ள தாா் சாலை.

Published On :14 ஜூலை 2026, 12:22 am IST

குண்டடம் அருகே வேங்கிபாளையம் பகுதியில் சேதமடைந்த தாா் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குண்டடம் ஒன்றியம், சூரியநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட வேங்கிபாளையம் பகுதியில் பேருந்து நிலையத்தில் இருந்து சுமாா் 2 கி.மீ. தொலைவு வரை தாா் சாலை மிகவும் சேதமடைந்து ஜல்லிக்கற்கள் சிதறிக் கிடக்கின்றன.

இதனால், அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனா். மேலும், இந்த சாலையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள், தனியாா், அரசுப் பேருந்துகளும் இயக்கப்படுவதால் அதில் பயணம் செய்வோரும் நாள்தோறும் சிரமம் அடைந்து வருகின்றனா்.

வேங்கிபாளையம் வழியாகச் செல்லும் இந்தச் சாலை, 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளதால், வாகனப் போக்குவரத்தும் அதிக அளவில் உள்ளது.

எனவே, அசம்பாவிதங்கள் நிகழும் முன் இந்த சாலையை சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.