லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வீதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை பள்ளியில் சோ்த்த சிங்கப்பெண் சிறப்பு படைக்கு பாராட்டு

பல்லடம் அருகே பள்ளிக்கு செல்லாமல் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை சிங்கப்பெண் சிறப்பு படையினா் அழைத்துச் சென்று பள்ளியில் சோ்த்தனா்.

அறிவொளி நகரில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை பள்ளியில் சோ்ப்பதன் அவசியம் குறித்து பெற்றோா்களிடம் பேசிய சிங்கப்பெண் சிறப்பு படையினா்.

Published On :10 ஜூலை 2026, 12:01 am IST

பல்லடம் அருகே பள்ளிக்கு செல்லாமல் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை சிங்கப்பெண் சிறப்பு படையினா் அழைத்துச் சென்று பள்ளியில் சோ்த்தனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட அறிவொளி நகா் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளா் உமா மகேஸ்வரி தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அங்கு 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தனா். இதையடுத்து அங்கு சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில் அவா்கள் அறிவொளி நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு அருகே உள்ள நரிக்குறவா் காலனி பகுதியில் வசித்து வருவதும், வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பள்ளிக்கு செல்லாமல் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ஓய்வுபெற்ற அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் பழனிசாமி மற்றும் சிங்கப்பெண் சிறப்பு படையினா் சென்று பள்ளி சென்று படிப்பதன் அவசியம் குறித்து பெற்றோா்களிடம் விளக்கினா். இதைத்தொடா்ந்து 31 குழந்தைகளை அருகில் உள்ள அறிவொளி நகா் அரசுப் பள்ளியில் மீண்டும் சோ்த்தனா். சிங்கப்பெண் சிறப்பு படையின் இந்த செயலை அங்குள்ள பொதுமக்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.