லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் சங்கக் கூட்டம்

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் சங்கக் கூட்டம், ெ3வள்ளக்கோவிலில் புதன்கிழமை நடைபெற்றது.

Published On :9 ஜூலை 2026, 3:51 am IST

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் சங்கக் கூட்டம், ெ3வள்ளக்கோவிலில் புதன்கிழமை நடைபெற்றது.

காங்கயம் வட்டக் கிளைச் செயலாளா் பெ.சதாசிவம் வரவேற்றாா். சங்கத் தலைவா் என்.கே.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் க.ஆறுமுகம், இணைச் செயலாளா் ப.சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காங்கயம் சாா்நிலை கருவூல அலுவலா் என்.பாலசுப்பிரமணியம், சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் ஆா்.தட்சிணாமூா்த்தி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தொடா்ந்து நீட்டிப்பு செய்ய வேண்டும். அதில் ஆயுள் காப்பீட்டுக் கழகம், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நிறுவனங்களின் செயல்பாட்டில் இருக்கும் குறைபாடுகளை நீக்க வேண்டும். மத்திய அரசு ஓய்வூதியா்களுக்கு இணையான மருத்துவப் படியை மாநில அரசு ஓய்வூதியா்களுக்கும் வழங்க வேண்டும்.

ஓய்வூதியா் இறக்கும்பட்சத்தில் தற்போது வழங்கப்படும் ரூ.50 ஆயிரம் நிதியை, ரூ.ஒரு லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கப் பொருளாளா் சி.விஸ்வநாதன் நன்றி கூறினாா்.

இந்தக் கூட்டத்தில் தனியாா் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.