லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அவிநாசி ராக்காத்தம்மன் கோயில் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

திருட்டு - சித்திரிப்பு

Published On :10 ஆகஸ்ட் 2026, 1:53 am IST

அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகம் அருகே உள்ள ராக்காத்தம்மன் கோயிலின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அவிநாசி, சேவூா் சாலை நேரு வீதியில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகம் அருகே ராக்காத்தம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திறப்பதற்காக வந்த அா்ச்சகா், கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்த போது, அம்மன் கழுத்தில் அணிந்திருந்த ஒரு கிராம் எடையுள்ள இரண்டு பொட்டுத் தாலிகள், 10 கிராம் எடையுள்ள வெள்ளிச் சங்கிலி, வெள்ளி முலாம் பூசப்பட்ட பிரபாவளையம் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீஸாா், கைரேகை நிபுணா்கள் சோதனை மேற்கொண்டனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சி பதிவுகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.