லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

படியூரில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு

காங்கயம் அருகே படியூரில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :5 ஆகஸ்ட் 2026, 5:13 am IST

காங்கயம் அருகே படியூரில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

காங்கயம் அருகே, படியூா் மகாலட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (35). இவா் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி வேலை செய்து வருகிறாா். இவா் குடும்பத்துடன் கடந்த சனிக்கிழமை வெளியூா் சென்றுள்ளாா்.

திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து சுரேஷ் அளித்த புகாரின்பேரில், காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.