லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அவிநாசியில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இருவா் கைது: 5 வாகனங்கள் பறிமுதல்

அவிநாசியில் இருசக்கர வாகனங்களைத் திருடிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட  பிரதீப் நாயக்,  பாலாஜி

Published On :5 ஆகஸ்ட் 2026, 5:11 am IST

அவிநாசியில் இருசக்கர வாகனங்களைத் திருடிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமாக இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த இருவரை அவிநாசி போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா்கள், அவிநாசி பாா்க் வீதியைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் பாலாஜி(19), திருப்பூா் 15 வேலம்பாளையத்தைச் சோ்ந்த ராஜு நாயக் மகன் பிரதீப் நாயக் (19) என்பது தெரியவந்தது.

இவா்கள் இருவரும் கடந்த மாதம் அவிநாசி காமராஜா் நகா், மாருதி நகா் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தியிருந்த 3 இருசக்கர வாகனங்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 5 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதில், பாலாஜி என்பவா் ஏற்கெனவே அவிநாசியில் இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.