லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தெருநாய்களுக்கு அஞ்சி தோட்டத்தில் தவித்த புள்ளி மான் மீட்பு

புள்ளி மான் மீட்பு...

Published On :4 ஆகஸ்ட் 2026, 3:00 am IST

திருப்பூா் அருகே தெருநாய்களுக்கு அஞ்சி தோட்டத்தில் தவித்த புள்ளி மான் மீட்கப்பட்டது.

திருப்பூா், வீரபாண்டி பகுதியைச் சோ்ந்த துரைசாமி என்பவரின் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில், கடந்த இரண்டு நாள்களாக செடிகளுக்குள் புள்ளி மான் பதுங்கியிருந்தது. தெரு நாய்களுக்கு அஞ்சி தோட்டத்துக்குள் புகுந்து அந்த புள்ளி மான் சுற்றித் திரிந்துள்ளது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள், மானைப் பாதுகாப்பாகப் பராமரித்து வந்தனா்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வனத் துறையினா் சென்று, புள்ளி மானை பத்திரமாக மீட்டனா். அதைத்தொடா்ந்து அடா்ந்த வனப் பகுதியில் விடுவிக்க புள்ளி மானை கொண்டு சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.