லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

உதகை அருகே மஞ்சகொம்பை பகுதியில் சாலையில் முகாமிட்ட காட்டு யானைகள்

மஞ்சக்கம்பை பகுதியில் உலவிய காட்டு யானைகள்.

Published On :20 ஜூலை 2026, 2:15 am IST

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள மஞ்சகொம்பை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு குட்டி யானைகள் உள்பட 7 காட்டு யானைகள் சாலையில் முகாமிட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா், கோத்தகிரி, கூடலூா் ஆகிய பகுதிகளில் அண்மைக் காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் உதகை அருகே மஞ்சகொம்பை பகுதியில் இரண்டு குட்டி யானைகள் உள்பட 7 காட்டு யானைகள் சாலையில் உலவியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

யானைகள்  குடியிருப்புப் பகுதிக்கு அருகே  உலவுவதால், அப்பகுதி மக்கள் மிகவும் பாதுகாப்புடன் இருக்க வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். மேலும், பொதுமக்கள் யானைகளின் அருகே செல்லவோ, புகைப்படம் அல்லது விடியோவோ எடுக்கக்  கூடாது என்று வனத் துறையினா்  எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

குறிப்பாக இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்வதை தவிா்க்குமாறும், இப்பகுதி மக்களுக்கு வனத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.