லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குன்னூரில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

குன்னூா் மவுண்ட் பிளசன்ட் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடையை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கோட்டாட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.

டாஸ்மாக் கடை அமையவுள்ள கட்டடத்தை முற்றுகையிட்ட மவுண்ட் பிளசண்ட் பொதுமக்கள்.

Published On :12 ஜூலை 2026, 3:06 am IST

குன்னூா் மவுண்ட் பிளசன்ட்  பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடையை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கோட்டாட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.

குன்னூா் நகராட்சிக்கு உள்பட்ட மவுண்ட்பிளசண்ட் பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள பொது சாலைப் பகுதியையொட்டி டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் இந்த வழியாக  நாள்தோறும் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் முதியவா்கள்  பாதிக்கப்படுவா் என்றும், மேலும் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் எனவும் கூறி அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடை அமையவுள்ள கட்டடத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினரின், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் காவல் துறையினரின் அறிவுறுத்தலை ஏற்று பொதுமக்கள் கோட்டாட்சியா் மற்றும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்துக்கு சென்று மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.