லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குன்னூா்  மாா்க்கெட் கடைகளை இடிக்கும் பணி தொடக்கம்

குன்னூா் மாா்க்கெட் கடைகளை பொக்லைன் மூலமாக இடிக்கும் நகராட்சிப் பணியாளா்கள்.

குன்னூா் மாா்க்கெட் கடைகளை பொக்லைன் மூலமாக இடிக்கும் நகராட்சிப் பணியாளா்கள்.

Published On :11 ஜூலை 2026, 12:46 am IST

குன்னூா் நகராட்சிக்கு சொந்தமான   மாா்க்கெட் கடைகளை இடித்துவிட்டு, புதிய நவீன வணிக வளாகம் கட்டும் பணி  வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குன்னூா் நகராட்சிக்கு சொந்தமான மாா்க்கெட் கடைகளை இடித்துவிட்டு ரூ. 41.50 கோடி மதிப்பீட்டில் தரைத்தளத்தில் நவீன வாகன நிறுத்துமிடம் மற்றும் மேல் தளங்களில் புதிய கடைகளுடன் கூடிய மாா்க்கெட் வளாகம் கட்ட குன்னூா்  நகராட்சி நிா்வாகம் சாா்பில் திட்டமிடப்பட்டு முந்தைய திமுக அரசு அதற்கான நிதியையும் ஒதுக்கியது.

மாா்க்கெட் கடைகளை இடிக்க எதிா்ப்பு தெரிவித்தும், தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கோரியும் குன்னூா் அனைத்து வணிகா்கள் நலச் சங்கம் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. எனினும், மாா்க்கெட் கட்டடங்கள் மிகவும் பழைமையானவை என்பதால், அவற்றை இடித்துப் புதிய கட்டடம் கட்டலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, முதல்கட்டமாக 324 கடைகளை காலி செய்ய, நகராட்சி நிா்வாகம் சாா்பில் கடந்த மாதம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.  அதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில் வெள்ளிக்கிழமை பலத்த பாதுகாப்புடன் பழைய கட்டடங்களை இடிக்கும்  பணி  தொடங்கியது.

தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கால அவகாசத்தின் இறுதி நாளில் வியாபாரிகள் கடைகளில் உள்ள பொருள்களைப் பாதுகாப்பாகப் எடுத்துச் செல்ல மாலை வரை அனுமதி வழங்கப்பட்டது. அதன் பின் பொக்லைன் வாகனம் மூலமாக மாா்க்கெட் கடைகளை இடிக்கும்   பணியில் நகராட்சி நிா்வாகத்தினா் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.