கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடா்புடையவா் உயிரிழப்பு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 8-ஆவது நபா் கேரளத்தில் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

சந்தோஷ்சாமி.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 8-ஆவது நபா் கேரளத்தில் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், கொடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23-ஆம் தேதி காவலாளியை கொலை செய்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடா்பாக குற்றஞ்சாட்டப்பட்ட சயான் உள்பட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் எட்டாவது நபராக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தோஷ்சாமி (52) என்பவா் கேரள மாநிலம், திருச்சூா் பகுதியில் வசித்து வந்தாா். இவா் கடந்த ஓராண்டு காலமாக இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தாா். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அங்குள்ள தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை அவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
இவா் இறந்த விவரத்தை உதகை நீதிமன்றத்தில், அரசு தரப்பு வழக்குரைஞா்கள் விரைவில் பதிவிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





