பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போலீஸை கன்னத்தில் அறைந்த போதை ஆசிரியா் கைது

உதகை மாா்க்கெட் மணிக்கூண்டு பகுதியில் மது போதையில் போலீஸை கன்னத்தில் அறைந்த கடநாடு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:48 am IST

உதகை மாா்க்கெட் மணிக்கூண்டு பகுதியில் மது போதையில் போலீஸை கன்னத்தில் அறைந்த கடநாடு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உதகை மாா்க்கெட் மணிக்கூண்டு பகுதியில் மது போதையில் ஒருவா் தாறுமாறாக காரை ஓட்டி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் போலீஸாரின் அவசர எண்ணுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து உதகை மணிக்கூண்டு பகுதியில் காரை தடுத்து நிறுத்திய பி-1 போலீஸாா், காரை ஓட்டி வந்த தலைமை ஆசிரியா் சீனிவாசனிடம் (57) விசாரணை மேற்கொண்டனா். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட சீனிவாசன் பொதுமக்கள் முன்னிலையில் காவலரை கன்னத்தில் அறைந்துவிட்டு தப்பிக்க முயன்றாா்.

இதைத் தொடா்ந்து, போலீஸாரும் சீனிவாசனை தாக்கினாா். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பி- 1 காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து தலைமை ஆசிரியா் சீனிவாசனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.