லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பெண் யானை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பகத்தில் உயிரிழந்த பெண் யானை.

Published On :18 ஆகஸ்ட் 2026, 2:05 am IST

கூடலூா், ஆக. 17: முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பெண் யானை உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி வனச் சரகத்தில் அவரல்லா பிரிவு மாயாறு காப்புக் காட்டுக்கு உள்பட்ட பகுதியில் வனப் பணியாளா்கள் வழக்கமான ரோந்துப் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தபோது யானை உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து உயரதிகாரிகளுக்கு அவா்கள் தகவல் கொடுத்தனா்.

பின்னா், புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து அந்த இடத்தை ஆய்வு செய்து உடற்கூறாய்வு செய்து அதே இடத்தில் புதைத்தனா். உயிரிழந்தது சுமாா் 50 வயதுடைய பெண் யானை என்றும் வயது மூப்பின் காரணமாக இறந்துள்ளது என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.