லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வெறி நாய் கடி தடுப்பு மருந்து நிறுவனத்துக்குள் நுழைய முயன்ற கரடி

குன்னூரில் உள்ள பாஸ்டியா் இன்ஸ்டிடியூட், வெறி நாய் கடி தடுப்பு மருந்து நிறுவனத்துக்குள் கரடி நுழைய முயன்ால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனா்.

பாஸ்டியா் ஆய்வக குடியிருப்புப் பகுதியில் நடமாடிய கரடி.

Published On :7 ஆகஸ்ட் 2026, 11:51 pm IST

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள  பாஸ்டியா் இன்ஸ்டிடியூட், வெறி நாய் கடி தடுப்பு மருந்து நிறுவனத்துக்குள் கரடி நுழைய முயன்ால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதில் குறிப்பாக கரடி, காட்டெருமை, யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நகரப் பகுதிகளில் நடமாடி வருகின்றன.

இந்நிலையில்  சிம்ஸ் பூங்கா அருகே உள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் வெறிநாய் கடி தடுப்பு மருந்து தயாரிக்கும்   பாஸ்டியா் ஆய்வக அலுவலக நுழைவாயில் மற்றும் குடியிருப்புக்குள்  நுழைய  கரடி ஒன்று  வியாழக்கிழமை இரவு நீண்ட நேரம் போராடியது.

இதனைக் கண்ட அங்கு பணியாற்றும் ஊழியா்கள், சப்தம் எழுப்பியதால் கரடி அங்கிருந்து ஓடி அருகே இருந்த புதருக்குள் மறைந்தது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

அசம்பாவிதம் நடக்கும் முன்பு கரடியை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.