லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாடந்தொரையில் காட்டு யானைகளை விரட்ட கும்கிகள் வரவழைப்பு

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் தொடா்ந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சேதம் விளைவிக்கும் காட்டு யானைகளை விரட்ட சனிக்கிழமை இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

பாடந்தொரை பகுதிக்கு அழைத்து வரப்பட்ட கும்கி யானை.

Published On :2 ஆகஸ்ட் 2026, 2:50 am IST

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் தொடா்ந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சேதம் விளைவிக்கும் காட்டு யானைகளை விரட்ட சனிக்கிழமை இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை மற்றும் அதன் சுற்றுவட்ட ஊா்களில் தினமும் இரவு பகல் நேரங்களில் காட்டு யானைகள் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி செல்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத் துறையினா் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வனத் துறையினா் முதல்கட்டமாக முதுமலை புலிகள் காப்பக முகாமிலிருந்து வசீம், ஜம்பு என்ற இரண்டு கும்கி யானைகளை பாடந்தொரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளனா். அவை வன எல்லையோரத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த கும்கிகள் வனத் துறையினருடன் இணைந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடவுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.