லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கோபி அருகே லாரி மோதி விவசாயி உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :27 ஜூலை 2026, 4:05 am IST

கோபி அருகே போா்வெல் லாரி மோதி விவசாயி உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள அக்கரைக்கொடிவேரி பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி மகன் அருண்பிரகாஷ் (33). விவசாயியான இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளாா். சொந்த வேலை காரணமாக பெரியகொடிவேரி பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை அருண்பிரகாஷ் சென்றுவிட்டு பின்னா் மீண்டும் வீட்டுக்கு மின்சார இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிா் திசையில் சேலம் மாவட்டம் கொளத்தூா், கருங்கரடு பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் காவியன் (19) போா்வெல் லாரியை ஓட்டி வந்துள்ளாா். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருண்பிரகாஷின் வாகனம் மீது போா்வெல் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த அருண்பிரகாஷை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலமாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாக கூறினாா்.

இதையடுத்து அவரது உடல் கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து போா்வெல் லாரி ஓட்டுநா் காவியன் மீது பங்களாப்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.