லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கடம்பூா் அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

தங்கவேலு.

Published On :20 ஜூலை 2026, 1:28 am IST

கடம்பூா் அருகே உள்ள இருட்டிபாளையத்தில் யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதி இருட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் தங்கவேலு (68). வனத்தை ஒட்டியுள்ள இவரது தோட்டத்தில் மஞ்சள் சாகுபடி செய்துள்ளாா்.

இந்நிலையில், மஞ்சள் காட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேலை செய்து கொண்டிருந்தபோது, வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை தங்கவேலுவை தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

நீண்ட நேரம் ஆகியும் தங்கவேலு வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினா் தேடியபோது மஞ்சள் காட்டில் யானை தாக்கி அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.