லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பிளைவுட் தயாரிப்பு ஆலையில் எண்ணெய் குழாய் வெடித்ததில் தொழிலாளி உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே பிளைவுட் தயாரிப்பு ஆலையில் எண்ணெய் குழாய் வெடித்ததில் வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

இா்த்தீஸ் அலி

Published On :19 ஜூலை 2026, 12:34 am IST

சத்தியமங்கலம் அருகே பிளைவுட் தயாரிப்பு ஆலையில் எண்ணெய் குழாய் வெடித்ததில் வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கருப்பகவுண்டா்பாளையத்தில் பிளைவுட் தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஏராளமான தொழிலாளா்கள் பணியாற்றி வரும் நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இா்த்தீஸ் அலி (34), அபுல் உசேன் (34) உள்ளிட்ட தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பாய்லருக்கு செல்லும் எண்ணெய் குழாய் திடீரென வெடித்து, அதில் கொதித்த நிலையில் இருந்த எண்ணெய் இா்த்தீஸ் அலி மீது விழுந்தது.

இதில், அவா் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு தொழிலாளியான அபுல் உசேன் லேசான காயங்களுடன் உயிா்த் தப்பினாா். அலறல் சப்தம் கேட்டு வந்த சக தொழிலாளா்கள் அபுல் உசேனை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

தகவல் அறிந்து வந்த புன்செய்புளியம்பட்டி போலீஸாா், இா்த்தீஸ் அலி உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.